இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள கேரள மாநிலம் மிகவும் மோசமான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் இடைவிடாத பருவக்காற்றால் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இதனால் வரும் வெள்ளப்பெருக்கின் சீற்றத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் கடும் மழை மற்றும் இந்த மாபெரும் வெள்ளப்பெருக்கால் தண்ணீர் மட்டம் உயர்ந்து மிகப்பெரிய சேதம் வராமல் இருக்கவேண்டுமென்பதற்காக கேரள அரசாங்கம் தங்களின் 30 க்கு மேற்ப்பட்ட அணைக்கட்டுகளை திறந்து விடவேண்டிய கட்டாயத்துக்கு வந்து விட்டிருக்கிறது. இருந்தாலும் 40 க்கும் மேற்ப்பட்ட நதிகளில் பாய்ந்து வரும் மிகவும் வலுவான இந்த வெள்ளம், சாலைகள், கிராமங்கள் மற்றும் நகரங்கள் என நதிகளைச் சார்ந்து இருக்கும் எல்லா இடங்களையும் முற்றுகையிட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது ; மேலும் வேளாண்மை, கால்நடைகள் போன்றவைகளுக்கு ஏற்பட்ட சேதம் விளைமதிக்கமுடியாதது. இன்னும் பல மக்களுக்கு குறைந்த பட்ச வசதிகள் தான் புனர்வாழ்வுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. காட்டில் வாழும் ஏராளமான பழங்குடி மக்களை சென்றடைய அரசாங்கம் மற்றும் நிவாரண பணியாளர்களால் இன்னும் முடியவில்லை.

கேரளாவின் 14 மாவட்டங்களும் இந்த பேராபத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 48 மணி நேரத்துக்குள் நூற்றுக்கும் மேலான மக்கள் மரணமடைந்துள்ளார்கள். வயநாடு, இடுக்கி, ஆலுவா, பத்தனம்திட்டா போன்ற இடங்கள் வெள்ளப்பெருக்காலும் நிலச்சரிவினாலும் மிகவும் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசுப்பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அந்தந்த இடத்திலுள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைத்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நதிகளின் கரைகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களுக்கு ஆகாயம் மூலமாக நிவாரணப் பொருட்கள் எடுத்துச் சென்று முகாம்களில் சேர்க்கப்பட்டது. அவசரசெய்திகளுக்கான தொலைபேசி எண்கள் எல்லோருக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தேவைகள் மிகவும் பெருகி வருகிறது என்பதால் கேரளாவுக்கு மேலும் உணவு, பண உதவிகள், மற்றும் நிவாரணப் பணியாளர்கள் தேவைப்படுகிறது. நாமெல்லாம் ஒருங்கிணைந்து உதவிசெய்தால் தான் சாத்தியமாகும்.

வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் இடங்களி லிருந்து இன்னும் பல மக்கள் வருகிறார்கள் என்பதால் மேலும் புதிய முகாம்கள் ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இப்படி அதிகரித்து வரும் முகாம்களுக்கு கூடுதல் உணவு, உடைகள், மருந்துகள் போன்றவைகள் தேவைப்படுகிறது. இது எதிர்பாராத ஒன்று என்பதால் அனைவரிடமும் உதவி கோரவேண்டியிருக்கிறது.

மருத்துவ வசதிகளால் உலகப்புகழ் பெற்ற கேரளாவில் இன்று பல மருத்துவமனைகள் வெள்ளபெருக்கால் பாதிக்கப்பட்டிருப்பதால் பல நோயாளிகளுக்கு அவசர சிகிட்சை செய்யக்கூட முடியாமல் தவிக்கின்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. முதியோர்கள் பலருக்கு தங்கள் தேவைகள் பூர்த்திசெய்ய முடியாமல் போகின்ற காட்சிகள் மிகவும் வேதனையளிக்கிறது. பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அவசர முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது.

யுத்தங்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பூகம்பம் போன்ற பல கட்டங்களில் இந்தியாவின் பல இடங்களிலுள்ள மக்களை கேரள மக்கள் தங்களால் முடிந்த உதவிகள் செய்திருக்கிறார்கள். பூகம்பத்தால் அழிந்த பல கிராமங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக எவ்வளவோ கேரள நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அவைகளை தத்தெடுத்திருக்கிறார்கள் என்பது இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூர்கிறோம். இருந்தும் கேரளாவுக்கு வந்து சேரும் உதவிகள் மிகவும் குறைவாக இருக்கிறது. கேரளாவின் இந்த அவலத்தைப்பற்றி எதையும் பேசாமல் இருக்கிறது தேசிய ஊடகங்கள் இதை எடுத்துசொல்லவோ மத்திய அரசை உதவி செய்ய கட்டுப்படுத்த எந்த முயற்சியும் தேசிய ஊடகங்கள் எடுப்பதில்லை. மத்திய அரசு கேரளாவில் இவ்வளவு பெரிய ஆபத்து நேர்ந்தும் அதை கண்டுகொள்ளவோ அல்லது இப்பேறிடறை தேசிய பேரழிவு என அறிவித்து இன்னும் பண உதவிகள் மற்றும் மீட்பு பணிகள் ஏற்பாடு செய்யவோ எந்த முயற்சியும் எடுத்திருப்பதாக தெரியவில்லை. இது முற்றிலும் நீதிகேடானது மற்றும் பண்பாடற்றது என்பதில் சந்தேகமில்லை. கேரளாவின் இந்த பேராபத்தை நமது நாட்டிலும் உலகத்திலும் உள்ள எல்லா இடங்களிலும் போதுமான அளவுக்கு எடுத்துச்சொல்வதற்க்கு தேசிய மற்றும் உலகளாவிய ஊடகங்களுக்கு நாங்கள் அன்பான வேண்டுக்கோள் விடுகிறோம்.

ஆனால் மனிதன் தோல்விகளுக்கு அஞ்சியதில்லை”. இந்த பேரழிவைக்கடந்து செல்ல கேரள மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள், சமய நிறுவனங்கள் என அனைத்து மலையாளிகளும் ஒருங்கிணைந்து போராடுகிறோம். மீட்பு பணியும் புதுப்பிக்கப்படுத்தலும் ஒரே சமயம் நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறோம். மீட்பு ப்பணிகளுக்கான செலவு பெரும்பாலும் 10000 கோடி ரூபாய் எட்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்த செலவை நிவர்த்திசெய்ய அனைத்து இந்திய மக்களையும் தங்களால் முடிந்த அளவு உதவி செய்ய கோருகிறோம். அரசாங்கங்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் என எல்லோரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்தால் கேரளாவை பழைய நிலைக்கு மீட்டுக்கொண்டுவரமுடியும். மேலும் மத்திய அரசு தேசிய பேரழிவாக உத்தரவிட்டு போதுமான உதவியை செய்யவேண்டும் என்றும் தேசிய ஊடகங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு செய்தியை பரப்பி மத்திய அரசை நிர்பந்தம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

“ நாம் எல்லோரும் இணைந்தால் மீண்டு வருவோம் !”
——–
சேதுலட்சுமி.சி,
நவமலையாளி ஆசிரியர் குழு.
Translated from English by Hariharan Sreenivasan Sivakami

Comments

comments